×

தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி,டிச.30: தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் வாகைகுளம் விமான நிலையத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று சென்னையிலிருந்து விமானத்தில் வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை, சபாநாயகர் அப்பாவு, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, ராஜகண்ணப்பன், டிஆர்பி ராஜா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் ஜஸ்வர்யா, ஏடிஜிபி ஜெயராமன், டிஐஜி மூர்த்தி, எஸ்பி ஆல்பர்ட் ஜான் மற்றும் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், சங்கரன்கோவில் ராஜா,

நெல்லை அப்துல்வகாப், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், தூத்துக்குடி முன்னாள் எம்பி எஸ்.ஆர்.ஜெயதுரை, மாநில இளைஞரணி துணை செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரம்மசக்தி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார், தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஜெபத்தங்கம் பிரேமா, முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் நட்டாத்தி காளிதாஸ் பண்ணையார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட்செல்வின், முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.ஜே. ஜெகன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், தெற்கு மாவட்ட துணைசெயலாளர் ஜெயக்குமார் ரூபன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், துணைமேயர் ஜெனிட்டா,

காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முஹம்மது, தமிழ்நாடு வணிக நல வாரிய உறுப்பினர் ரங்கநாதன் என்ற சுகு, ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், நகரச்செயலாளர் நவநீத பாண்டியன், ஆத்தூர் நகர செயலாளர் முருகானந்தம் ஆத்தூர் பேரூராட்சித் தலைவர் கமால்தீன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாணிக்கவாசகம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாலகுருசுவாமி, மாநில துணைசெயலாளர் அன்பழகன் மற்றும் திரளான திமுகவினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அப்போது விமான நிலையத்திலிருந்து நின்று கொண்டிருந்த கட்சி தொண்டர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று சால்வை மற்றும் பூ கொத்து வாங்கினார். அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.பின்னர் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் முதல்வர் மு.க ஸ்டாலின் மறவன்மடத்தில் உள்ள சத்யா ரிசார்ட் தங்கும் விடுதியில் ஓய்வு எடுத்தார்.

பின்னர் மாலை 4.50 மணிக்கு தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டானா அருகில் சுமார் ரூ.32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் 63 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 4 தளங்களுடன் கட்டி முடிக்கப்பட்ட மினி டைட்டல் பார்க்கை திறந்து வைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் நடந்த வடக்கு தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில்முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். இரவு சத்யா ரிசாட்டில் ஓய்வெடுத்தார்.

தொடர்ந்து இன்று (30ம் தேதி) காலை 9 மணி அளவில் சத்யா ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் வைத்து நடைபெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் விரிவாக்கம் செய்யப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

The post தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Thoothukudi airport ,Thoothukudi ,Tamil Nadu ,Vagaikulam airport ,Chennai ,DMK ,Thoothukudi… ,
× RELATED சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள்,...