×
Saravana Stores

தொடர் விடுமுறையால் கூட்டம் அலைமோதல் திருப்பதியில் 3 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசை: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அலைமோதுகின்றனர். இதனால் 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் சுமார் 18 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். தற்போது, தீபாவளி பண்டிகை மற்றும் வாரவிடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

நேற்றுமுன்தினம் 88,076 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது. இதனால் திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் நிரம்பியது. பக்தர்கள் சிலாதோரணம் வரை 3 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

The post தொடர் விடுமுறையால் கூட்டம் அலைமோதல் திருப்பதியில் 3 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசை: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Tirupati Eyumalayan temple ,Diwali ,Swami ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே...