×

உத்தரகாண்டில் பரபரப்பு 17வயது சிறுமியுடன் உறவு 19 பேருக்கு எய்ட்ஸ் உறுதி

நைனிடால்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 17 வயது சிறுமியுடன் உறவு வைத்த 19 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் ராம்நகரில் வசிக்கும் 17 வயது சிறுமி போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர். அவர் போதைப்பொருள் வாங்கித்தரும் இளைஞர்களுடன் நெருக்கமாக இருந்தார்.

அந்த வகையில் அவருடன் தொடர்பு வைத்த பல இளைஞர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சோதித்த போது எச்ஐவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை சிறுமியுடன் உறவு வைத்த 19 இளைஞர்களுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் திருமணமானவர்கள். இதனால் அவர்களின் மனைவிகளுக்கும் சோதனை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

The post உத்தரகாண்டில் பரபரப்பு 17வயது சிறுமியுடன் உறவு 19 பேருக்கு எய்ட்ஸ் உறுதி appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Nainital ,Ramnagar, Nainital, Uttarakhand ,
× RELATED ‘ஐ லவ் யூ’ என வீடியோ அனுப்ப வைத்து...