கேரளா: சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தக்கல் முறையில் முன்பதிவு வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 15ம் தேதி திறக்கப்படுகிறது. டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து இந்த ஆண்டு பக்தர்களின் வருகையை ஒழுங்குப்படுத்த புதிய ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது உள்ள ஸ்பாட் புக்கிங் வசதிக்கு பதிலாக ரயில்வே முன்பதிவில் புழக்கத்தில் உள்ள தட்கல் முறையை அறிமுகப்படுத்த கேரள அரசு பரிசீலித்து வருகிறது. இந்தமுறை வெற்றி அடைந்தால் அடுத்த மண்டல சீசனில் இருந்து ஸ்பாட் புக்கிங் முறையை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல திங்கள் முதல் வியாழன் வரை பக்தர்கள் வருகை குறைவாக காணப்படும் நாட்களில் ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 65 பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நிமிடத்துக்கு 80 பேர் அனுமதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
The post சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த புதிய திட்டம்: ஸ்பாட் புக்கிங் முறைக்கு பதில் தட்கல் முறை அறிமுகம் appeared first on Dinakaran.