×

கேரள மாநிலம் ஷோர்னூர் பகுதியில் ரயில் மோதிய விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஷோர்னூர் பகுதியில் ரயில் மோதிய விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழந்தனர். ரயில் மோதியதில் கேரளாவில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சேலத்தை சேர்ந்த லட்சுமணன், ராணி, வள்ளி, லட்சுமணன் ஆகியோர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாரதப்புழா ஆற்றில் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது ரயில் மோதியது. டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ரயில் மோதியதில் ஆற்றில் தூக்கி வீசப்பட்டு இறந்தவரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கேரளாவில் தங்கி 4 பேரும் ரயில்வேயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்

The post கேரள மாநிலம் ஷோர்னூர் பகுதியில் ரயில் மோதிய விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Shornur area ,Kerala ,Thiruvananthapuram ,Shornur, Kerala ,Tamil Nadu ,Tamils ,
× RELATED தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட மருத்துவக்...