சென்னை: சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் இடங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ரூ.68 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ‘தெற்கு அலை’ என்ற பெயரில் நீர் சவால்களை வாய்ப்புக்களாக மாற்றுவது குறித்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் கூறுகையில், ‘‘வடகிழக்கு பருவமழை கணிப்பதில் சிரமம் உள்ளது என்கின்றனர் வல்லுனர்கள். மழை கணிப்பு தொடர்பாக ரூ.68 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பணிகள் அடுத்த 4 மாதங்களில் நிறைவு பெறும். அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சென்னை மற்றும் புறநகரில் எந்த அளவிற்கு மழை பொழிவு இருக்கும்.
ஏரிகளில் எவ்வளவு கொள்ளளவு நீர் உள்ளது என்பதை மக்களே தெரிந்து கொள்ளலாம். விவசாயத்தில் சிக்கனமாக நீரை பயன்படுத்தி, அதிக விளைச்சலை கொடுத்து, லாபத்தை பெற்றுக் கொடுக்கும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டு பல்கலையுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளது’’ என்றார்.
The post வெள்ளப் பகுதிகள் அறிய ரூ. 68 கோடியில் புதிய திட்டம்: நீர்வளத்துறை செயலாளர் தகவல் appeared first on Dinakaran.