அருமனை, அக்.26: அருமனை அருகே நெடியர் சாலை பகுதி வழியாக நேற்று ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. அந்த லாரியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் லாரியை நிறுத்தி சிறைபிடித்தனர். இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் கொச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு கன்டெய்னர் லாரி சென்றது தெரியவந்தது. போலீசார் லாரியின் பின்பகுதியை திறந்த போது ஏராளமான மீன் கழிவுகள் இருந்தன. இதுதொடர்பாக லாரி டிரைவர்களிடம் கேட்டபோது, உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று தூத்துக்குடியில் உள்ள மீன் உணவு தொடர்புடைய நிறுவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினர். பின்னர் போலீசார் இந்த வழியாக லாரியில் கழிவுகளை ஏற்றி கொண்டு வரக்கூடாது என டிரைவர்களை எச்சரித்துவிட்டு லாரியை அங்கிருந்து தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தனர்.
The post அருமனை அருகே மீன் கழிவுகளுடன் வந்த கன்டெய்னர் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.