×
Saravana Stores

கால்நடை வளர்க்கும் பகுதியாக மாறிய ஊட்டி நகராட்சி பூங்கா

 

ஊட்டி, நவ. 5: ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகே நகராட்சி பூங்கா கால்நடைகள் வளர்க்கும் இடமாக மாறி அசுத்தமாக காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி நகரில் பல்வேறு இடங்களிலும் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் சிறு சிறு பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை ஒட்டி, அறிவுசார் மைய நூலகம் எதிரே நகராட்சி பூங்கா உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூங்கா பராமரிப்பு செய்யப்பட்டு அங்கு அமர வசதியாக அழகிய நிழற்குடையுடன் கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டன. மேலும் சுற்றிலும் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டன. இந்த சூழலில் கால போக்கில் பராமாிப்பு இல்லாததால் இப்பூங்கா தற்போது கால்நடைகள் கட்டி வைக்கும் இடமாக மாறி அசுத்தமாக காட்சியளிக்கிறது. சுகாதாரமின்றி உள்ளதால் நோய் பரவும் அபாயமும் நீடிக்கிறது. எனவே பூங்காவை தூய்மைப்படுத்தி சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post கால்நடை வளர்க்கும் பகுதியாக மாறிய ஊட்டி நகராட்சி பூங்கா appeared first on Dinakaran.

Tags : Ooty Municipal Park ,Ooty ,Ooty Pinkerpost ,Ooty, Nilgiris district ,Dinakaran ,
× RELATED கூடலூர்- ஊட்டி சாலையில்...