×

கோவையில் கன மழை

 

கோவை, நவ. 5: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேட்டுப்பாளையம், தடாகம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலையில் திடீரென உக்கடம், ரயில் நிலையம், டவுன்ஹால், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.

மழை பெய்த பின்னும் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு உக்கடம், ராமநாதபுரம், காந்திபுரம், கணபதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. இந்த மழையினால் சாலையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிற்கு உள்ளாகினர். இந்நிலையில், இன்றும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post கோவையில் கன மழை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Western Ghats ,Mettupalayam ,Tadagam ,Thudialur ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல், சிறுவாணி போன்ற சுற்றுலா...