×

அவிநாசி திமுக பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்

 

அவிநாசி, நவ.5: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், அவிநாசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோகுல் ஆகியோர் தலைமையில் அவிநாசியில் திமுக பாகநிலை முகவர்கள் முதல் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

அவிநாசி நகரத்தில் வார்டு வாரியாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் நடராசன், மாநகராட்சி மன்ற கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், திருப்பூர் சிவபாலன், வடக்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மணி, அவிநாசி ஒன்றிய திமுக செயலாளர் சிவப்பிரகாஷ்,

அவிநாசி நகர திமுக அவைத்தலைவர் ராயப்பன், நகர திமுக செயலாளர் திராவிடன் வசந்தன், நகர திமுக பொருளாளர் தங்கவேல், நகர துணை செயலாளர்கள் சாந்தி, சீனிவாசன், பருக்கத்துல்லா, மாவட்ட பிரதிநிதிகள், ஆறுமுகம், வேலுசாமி, முன்னாள் நகர திமுக செயலாளர் பொன்னுசாமி, பேருராட்சி மன்றத்தலைவர் தனலட்சுமி மற்றும் 18 வார்டுகளை சேர்ந்த திமுக செயலாளர்கள் பங்கேற்றனர் .

The post அவிநாசி திமுக பாகநிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Timuka ,Tamil Nadu ,Mu. K. ,Stalin ,Tiruppur Northern District ,Dimuka ,South Constituency Assemblyman ,Selvaraj ,Assembly ,Constituency ,Officer Gokul ,Avinasi Dimuka ,Dinakaran ,
× RELATED அவிநாசியில் இயற்கை சுற்றுச்சூழலில்...