×

தவறை தட்டிக் கேட்டவருக்கு அடி

தேவதானப்பட்டி, அக். 24: தேவதானப்பட்டி சொர்ணம்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவர் தேவதானப்பட்டி காந்திமைதானம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜெயராமு (52) என்பவர் அசிங்கமாக பேசியுள்ளார். இதை முருகதாஸ் தட்டிக்கேட்டதற்கு, அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் முருகதாஸுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், தேவதானப்பட்டி போலீசார் ஜெயராமு மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

The post தவறை தட்டிக் கேட்டவருக்கு அடி appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Murugadoss ,Devadanapatti Sornampillai Street ,Devadanapatti Gandhimaidanam ,Jayaramu ,Pallivasal Street ,
× RELATED 10 வருடங்களுக்குப் பிறகு இணையும் சல்மான் – முருகதாஸ்