×

மீஞ்சூர் அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்தவாயல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.15.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கடந்த ஆண்டு கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊராட்சிமன்ற தலைவர் பாலன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராஜா, வார்டு உறுப்பினர் சரளா கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி பணியாளர் துளசி ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். திறப்பு விழாவில் கிராம நிர்வாகிகள் அப்பாவு, சிங்காரம், பிரசாத், ராஜேந்திரன், கேசவன், ரவிக்குமார், பார்த்திபன், நந்தா, கலையரசன், பழனி, சரண்ராஜ், மகளிரணி மஞ்சுளா, லட்சுமி, சுமதி, சகிலா, அன்னம்மாள், அருணா, தமிழ்ச்செல்வி மற்றும் இளைஞர்கள், மகளிர், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மீஞ்சூர் அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : New Anganwadi ,Meenjur ,Ponneri ,Neythavayal ,Panchayat ,President ,Balan ,Dinakaran ,
× RELATED நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற...