×

பொன்னமராவதியை வருவாய் கோட்டமாக்க பொதுமக்கள் கோரிக்கை

 

பொன்னமராவதி, அக்.22: பொன்னமராவதியை கோட்டமாக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி தாலுகாவில் 42கிராம ஊராட்சி, ஒரு பேரூராட்சி உள்ளது. இந்த தாலுகாவின் மக்கள் வருவாய்துறை சம்மந்தமாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு இலுப்பூர் செல்லவேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலையுள்ளது.

மேலும் சரியான போக்குவரத்து வசதியும் இல்லை. எனவே பொன்னமராவதியை தலைமையிடமாகக்கொண்டு புதிதாக வருவாய்கோட்டமாக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது பொன்னமராவதி தாலுகா மக்கள் சிரமமின்றி தங்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விசாரணைகளை பெற வழிவகை ஏற்படும். எனவே பொன்னமராவதியை புதிதாக வருவாய் கோட்டமாக்கவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொன்னமராவதியை வருவாய் கோட்டமாக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ponnamarawati ,Ponnamarawathi ,Ponnamarawati taluka ,oradchi ,Revenue Commissioner's Office ,Ilupur ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி ஊராட்சி பகுதியில்...