×
Saravana Stores

16 மாநிலங்களில் தடை விதித்தும் நாடு முழுவதும் கூல் லிப் தடை செய்யாதது ஏன்? ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்த வழக்குகளில் கைதானவர்கள், தலைமறைவாக இருப்பவர்கள் தாக்கல் செய்த ஜாமீன், முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி விசாரித்து வருகிறார். முந்தைய விசாரணையின்போது, கூல் லிப் போன்ற போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப்பொருளாக அறிவித்து, அந்தப் பொருட்களுக்கு இந்தியா முழுவதும் ஏன் தடை விதிக்கக்கூடாது என ஒன்றிய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், கூல் லிப் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தெலங்கானா, கர்நாடகாவைச் சேர்ந்த 3 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘இந்தியாவில் 16 மாநிலங்களில் கூல் லிப், குட்கா பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஏன் தடை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை’’ என கேள்வி எழுப்பினர். பின்னர் மனுக்களின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

The post 16 மாநிலங்களில் தடை விதித்தும் நாடு முழுவதும் கூல் லிப் தடை செய்யாதது ஏன்? ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.

Tags : ICourt ,Union Govt. ,Madurai ,Justice ,D. Bharatasakkaravarthy ,High Court ,ICourt branch ,Union Government ,Dinakaran ,
× RELATED கூல் லிப்-க்கு கட்டுப்பாடு: ஒன்றிய அரசு பதில்தர ஐகோர்ட் கிளை ஆணை