×

தக்கலையில் ஊழல் எதிர்ப்பு சங்க கூட்டம்

தக்கலை, அக்.17: ஊழல் எதிர்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் பயனாளிகள் சங்க கூட்டம் தலைவர் பால்ராஜ் தலைமையில் தக்கலையில் நடைபெற்றது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் 20 ஆண்டுகள் நிறைவானதையடுத்து பிளஸ்2 மாணவிகளுக்கு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டது. மேலும் தகவல் அறியும் உரைமைச்சட்டம் குறித்து இந்தியன் குரல் தென்மண்டல அமைப்பாளர் ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மோகன், அன்னபுஷ்பம் ஆகியோர் பேசினர். டேனியல் நன்றி கூறினார். இதில் சுனிதா, ரேகா, சுபாஷினி, ஜாண்றோஸ், செல்வராஜ், சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

The post தக்கலையில் ஊழல் எதிர்ப்பு சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Takkalai ,Thakkalai ,corruption ,Right ,to Information ,Act ,Beneficiaries ,Association ,President ,Balraj ,-corruption association ,Takkala ,Dinakaran ,
× RELATED விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்