×

விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

தக்கலை, டிச.20: அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கன்னியாகுமரி மைய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தக்கலை தபால் நிலையம் முன்பாக மாவட்டச் செயலாளர் மேசியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மோடி அரசு பதவி விலக வேண்டும், அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், அமித்ஷா நாடாளுமன்ற அவையிலேயே மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

The post விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Liberation Tigers ,Thakkalai ,Thakkalai Post Office ,Kanyakumari Central District Liberation Tigers Party ,District Secretary ,Messia ,Union Minister ,Amit Shah ,Ambedkar ,Modi… ,Liberation ,Tigers ,Dinakaran ,
× RELATED விடுதலை சிறுத்தைகள் கட்சியில்...