×

இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் போராட்டம்..!!

இஸ்தான்புல்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். துருக்கியில் நடைபெற்ற போராட்டத்தின் போது இஸ்ரேல் அரசுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் முழக்கமிட்டப்படி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற இந்த பேரணியில் துருக்கி மற்றும் பாலஸ்தீன தேசிய கொடிகளை கையில் ஏந்தியபடி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டன.

இஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற பேரணியின் போது பாலஸ்தீன மற்றும் லெபனானுக்கு ஆதரவாக போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். பார்சிலோனா நகரில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து ஹமாஸ் உடனான போரை நிறுத்த இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தின. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற போராட்டத்தின் போது காசா மீதான போரை உடனடியாக நிறுத்த பொதுமக்கள் வலியுறுத்தினர்.

பாகிஸ்தானில் கராச்சி மாகாணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலத்தீனத்துக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெற்று வரும் போரில் பாலஸ்தீனர்கள் 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

The post இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,Palestine ,ISTANBUL ,CIVILIANS ,Turkey ,Dinakaran ,
× RELATED காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: 20 பேர் பலி