- கலெக்டர்
- நாகர்கோவில்
- குமாரி மாவட்டம்
- குமாரி மாவட்ட ஆட்சியர்
- தார்
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- குமாரி கலெக்டர்
- தின மலர்
நாகர்கோவில், மே 11: குமரி மாவட்டத்தில் மகளிர் விடியல் பயண திட்டத்தில் 22.6 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர் என்று குமரி மாவட்ட கலெக்டர் தர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையில், அரசு பஸ்களில் அனைத்து மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் வாயிலாக 445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூ.888 வரை சேமிப்பு பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து குமரி மாவட்ட கலெக்டர் தர் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் என ஆணைப்பிறப்பித்ததன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராணித்தோட்டம் – II, ராணித்தோட்டம் – III, செட்டிகுளம், கன்னியாகுமரி, விவேகானந்தபுரம், குழித்துறை I, குழித்துறை II, திருவட்டார், திங்கள் நகர், மார்த்தாண்டம், குளச்சல் ஆகிய 11 பணிமனைகளிலிருந்து பல்வேறு வழிதடங்களில் தினந்தோறும் மொத்தம் 319 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நகர பேருந்துகள் அனைத்திலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு காலகட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் சுமார் 22.6 கோடி பெண்களும், 1,83,197 திருநங்கைகளும், 13,34,006 மாற்றுத்திறனாளிகளும் பயன் பெற்றுள்ளார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post குமரியில் 22.6 கோடி முறை பெண்கள் இலவச பேருந்து பயணம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.