×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது

திருவொற்றியூர், அக். 29: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூரைச் சேர்ந்த 7 வயது சிறுமி, வண்ணாரப்பேட்டை தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சிறுமி வழக்கம்போல் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, மேல் தளத்தில் வசிக்கும் கட்டிடத் தொழிலாளி மோத்தி(42), போதையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோத்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur ,Bokso ,Tiruvottiyur ,Vannarpet ,
× RELATED பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறி...