×

மதுராந்தகம் நகர காங். தலைவர் தேர்வு

மதுராந்தகம், அக்.29: மதுராந்தகம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய நகர தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மதுராந்தகத்தில் காங்கிரஸ் நகர நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், மதுராந்தகம் நகர காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், காங்கிரஸ் நிர்வாகி கிறிஸ்டோபர் ஜெயபால் தலைமை தாங்கினார். தமிழமுதன், நேருஜி, கெங்காதரன், மணி, கன்னியப்பன், காந்திநகர் மணி, கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மதுராந்தகம் நகர காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மதுராந்தகம் நகரத்திற்கு உட்பட்ட மோச்சரியை சேர்ந்த லோகு ஒருமனதாக நியமிக்கப்பட்டார். மேலும், புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இதை அடுத்து புதிய நிர்வாகிகள் கட்சி தொண்டர்களிடம் தங்களின் பணி சிறக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் நகர செயலாளர் ஷேக் ஐயூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மதுராந்தகம் நகர காங். தலைவர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Madhurandakam City Cong ,Madhurandakam ,Maduradakam ,Congress party ,Congress ,Madurandakam City Congress Party ,Christopher ,Madurandakam City Congress ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் பகுதிகளில் மழையால்...