×
Saravana Stores

தமிழக அரசுக்கு விவசாயிகள் பாராட்டு தஞ்சாவூர் கல்லணைக்கால்வாயில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்

தஞ்சாவூர்: கல்லணை கால்வாயில் கழிவு நீர் குப்பைகளால் மாசடைந்து இருப்பதாகவும், அதில் மீன்கள் செத்து மிதிப்பதாகவும் தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கால்வாயை ஆய்வு செய்தனர். கல்லணை கால்வாயில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் கால்வாயை கடந்து செல்லும் கழிவுநீர் வடிகால் அமைப்பு சேதமடைந்து கழிவுநீர் கால்வாயில் கலப்பதாலும் கால்வாயில் மீன்கள் இறந்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்த செய்தி நேற்றைய தினகரனில் வெளியானது. இதன் எதிரொலியாக நேற்றே மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கால்வாயை ஆய்வு செய்தனர். கால்வாயில் இருந்து இறந்த மீன்களும் மற்றும் குப்பைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் கால்வாயில் தண்ணீர் மற்றும் இறந்த மீன்களின் மாதிரி ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது . மேலும் கால்வாயை கடந்து செல்லும் மாநகராட்சியின் கழிவுநீர் வடிகால் அமைப்பை விரைவாக சரி செய்ய மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் மாநகராட்சிக்கு கால்வாயில் குப்பைகள் மற்றும் கழிவு நீர் கலக்காமல் தடுக்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

 

The post தமிழக அரசுக்கு விவசாயிகள் பாராட்டு தஞ்சாவூர் கல்லணைக்கால்வாயில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Thanjavur Kallanai canal ,Thanjavur ,Kallani canal ,Fisheries Department ,Water Resources Department ,Kallanai canal ,Dinakaran ,
× RELATED சமுதாய மற்றும் வகுப்பு...