வாஷிங்டன்: அமெரிக்கா இருப்பதால்தான் கனடா இன்று உயிர் வாழ்ந்து வருவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். பிற நாடுகளை அச்சுறுத்த பொருளாதார பலம் தற்போது ஆயுதமாக மாறியுள்ளதாக அமெரிக்காவை கனடா பிரதமர் சாடியிருந்த நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ஏராளமான இலவச சலுகைகளை பெறும் கனடாவுக்கு நன்றியுணர்வு இல்லை என்று ட்ரம்ப் விமர்சனம் செய்தார்.
