×

மார்ச் 5ல் நடைபெற உள்ள தேர்தலில் போட்டி நேபாளத்தில் 4 அமைச்சர்கள் ராஜினாமா: வேட்பு மனு தாக்கல்

காத்மண்டு: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும், ஊழலை கண்டித்தும் இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து அந்நாட்டின் உச்ச நீதிமன்ற முன்ளாள் நீதிபதி சுசீலா கார்க்கி நேபாள இடைக்கால பிரதமராக கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி பதவி ஏற்றார்.

அவரது பரிந்துரைப்படி நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. தொடர்ந்து வரும் மார்ச் 5ம் பொதுதேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நடைபெற மார்ச் 5ம் தேதி நடைபெற உள்ள பொதுதேர்தலில் 92,40,131 பெண்கள் உள்பட மொத்தம் 1,89,03,689 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில் நடைபெற உள்ள பொதுதேர்தலில் போட்டியிட ஏதுவாக சுசீலா கார்க்கி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 4 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அதன்படி தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த ஜெகதீஷ் கரேல் மற்றும் விளையாட்டு அமைச்சர் பப்லு குப்தா ஆகியோர் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தனர். அறிவியல் மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருந்த மஹாபீர் பன், நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் மியாக்டி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன் எரிசக்தி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் குல்மான் கிசிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் காத்மண்டு தொகுதி-3ல் போட்டியிட நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Tags : Nepal ,5 ,Kathmandu ,India ,K. B. Sharma Oli ,
× RELATED அதிபர் டிரம்ப்-கமேனி மோதல் தீவிரம்...