- செபி
- சென்னை
- 15வது சர்வதேச மூலதனச் சந்தைகள் மாநாடு
- இந்தியா
- இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்
- துகின் காந்தா பாண்டே
சென்னை: இந்தியாவின் தேசிய பங்குச் சந்தைகளின் உறுப்பினர்களின் 15வது சர்வதேச மூலதனச் சந்தை மாநாடு – 2026 சென்னையில்நேற்று நடந்தது. இதில் இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரிய (செபி) தலைவர் துகின் காந்தா பாண்டே கூறியதாவது: இந்திய மூலதன சந்தை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 2020 நிதியாண்டில் 4.3 கோடியாக இருந்தது. இது தற்போது 13.7 கோடியாக அதிகரித்திருக்கிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும், 311 ஐபிஓக்கள் வெளியிடப்பட்டு, அவற்றின் மூலம் ரூ. 1.7 லட்சம் கோடி திரட்டப்பட்டுள்ளது. மேலும் திரட்டப்பட்ட மொத்த பங்கு மூலதன நிதி 3.8 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் சந்தையின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளே மேற்கொள்வதோடு, சிறந்த கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம்.
சமீபத்தில் பங்கு தரகர்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. பங்குச்சந்தை பரிவர்த்தனையில் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப கோளாறுகளுக்கு தீர்வு காண்பதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு துகின் காந்தா பாண்டே கூறினார்.
