கிருஷ்ணராயபுரம், ஜன. 7: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈப்பு ஓட்டுநர் பணிக்கான நேர்காணல் நாளை நடைபெற உள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தங்கராசு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தை நிரப்புவதற்கு நேர்காணல் அழைப்பினை பெற்றவர்கள் மட்டும் நாளை (08.01.2026) காலை 11.00 மணிக்கு கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென தெரிவித்துள்ளார்.
