- கரூர்-வெண்ணைமலை
- கரூர்
- தமிழ்நாடு HMS கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் கவுன்சில்
- தொழிலாளர் நல வாரியம்
- மாவட்ட செயலாளர்
- ஆனந்தராஜ்...
கரூர், ஜன. 6: தமிழ்நாடு எச்எம்எஸ் கட்டுமான அமைப்புச் சாரா தொழிலாளர் பேரவை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர்- வெண்ணைமலையில் உள்ள தொழிலாளர் நல வாரியம் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் வரவேற்றார், நிர்வாகிகள் ராதிகா, தமிழ்மணி, சதீஸ்குமார் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர். தமிழகம் முழுதும் வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான, அமைப்புச் சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் பொங்கல் போனசாதக ரூ. 7000ம் வழங்க வேண்டும். நலவாரியங்களில் பதிவு செய்து 60வயது பூர்த்தியாகி ஒய்வூதியம் பெறும் அனைவருக்கும் ஒய்வூதியம் குறைந்தபட்சம் மாதம் ரூ. 6000ம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
