கரூர், ஜன. 8: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆஸ்பத்திரி சாலையில் கரூர் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை செயல்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லு£ரி மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்ததும், இங்கிருந்த பல்வேறு துறைகள் அந்த பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டன.
தற்போது, இந்தபழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு சில துறைகள் செயல்படுகிறது. இந்த பழைய அரசு மருததுவமனை அருகே பல ஆண்டுகளுக்கு முன்பே அனைவரும் பயன்படுத்தும் வகையில் கழிவறை அமைத்து தரப்பட்டது.
சில மாதங்கள் இவை பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது பயன்படுத்திட முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த பகுதியினர் பயன்படுத்தும் வகையில் இந்த பழுதடைந்த நிலையில் உள்ள கழிவறையை திரும்பவும் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
