×

கரூர் வாங்கல் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கரூர், ஜன. 8: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் நெரூர் சாலை 16 கல் மண்டபம் அருகே 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக இந்த பகுதி விஏஒ வாங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு பிரோதபரிசோதனைக்கு அனுப்பினார். மேலும் இறந்து கிடந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Karur Vangal ,Karur ,Vangal ,Kal Mandapam, Nerur Road ,Karur… ,
× RELATED ஓய்வூதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்