×

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு காவல்துறை கட்டுப்பாடு விதிப்பு

 

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நட்சத்திர விடுதிகளுக்கு வரும் வாகனங்களை முறையாக சோதனையிட்டு பதிவு செய்ய வேண்டும். நட்சத்திர விடுதிகளில் நுழைவு வாயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட அரங்கத்தில் மட்டுமே புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிக்காக தற்காலிக மேடை அமைப்பதற்கு தீயணைப்புத் துறையின் தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.

Tags : Chennai ,New Year's Eve ,New Year ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4,42,070 பேர் விண்ணப்பம்