தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து ஈரோடு செல்லும் பாசஞ்சர் ரயில் இன்று காலை 5.30 மணி அளவில் தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பாவூர்சத்திரத்திற்கு புறப்பட்டது. இடையில் சுமார் 200 மீட்டர் தூரம் சென்ற நிலையில் பாவூர்சத்திரம் கேடிசி நகருக்கு பின்புறம் மேய்ச்சலுக்கு செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 50 செம்மறிஆடுகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 20 சினை ஆடுகள் உள்பட அனைத்து ஆடுகளும் ரத்த சகதியாகி சம்பவ இடத்திலேயே இறந்தன. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
