- Kanakaraj
- முத்தரப்பு
- Icourt
- மதுரை
- G.R.
- அய்கோர்ட் மதுரை கிளை
- அறக்கட்டளை துறை
- மதுரை கலெக்டர்
- சுவாமிநாதன்
மதுரை: மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராக அறநிலையத்துறை மற்றும் மதுரை கலெக்டர் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நடந்து வருகிறது. இன்றைய விசாரணையின் போது, மனுதாரர் ராமரவிக்குமார் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், “தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை, உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமை; பொது அமைதி கெடும் என்பது சாக்குபோக்கு. தனி நீதிபதி தீர்ப்பில் தனது கருத்துகளை திணித்துள்ளதாக எதிர்த்தரப்பினர் வாதிடுகின்றனர்; அது சரியல்ல.
இரு மதத்தினர் இடையே பிரச்சனை ஏற்படும் என்பதற்காக அடிப்படை உரிமையை நிறைவேற்ற அரசு தயங்கக்கூடாது. 1996ல் திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜ் உத்தரவிட்டார், “இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ” திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜ் உத்தரவு பிறப்பிக்கவில்லை. 1996ல் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றவேண்டும் என நீதிமன்ற உத்தரவில் இல்லை. தர்காவிலிருந்து 15 மீட்டர் தொலைவில் கோயிலுக்கு சொந்தமான எந்த பகுதியிலும் தீபம் ஏற்றலாம் என்றுதான் கூறினார். மனு விசாரணைக்கு ஏற்றதா என்பது குறித்து மட்டும் மனுதாரர் வாதிட வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தனர்.
