ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு மேற்கொண்டார். அதிமுகவில் எந்த அணிக்கு ஆதரவு என்று பாஜக இதுவரை அறிவிக்காத நிலையில் அண்ணாமலை பழனிசாயை சந்தித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுவார் என பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தலில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என அறிவித்தார்.

இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு மேற்கொண்டார். இதையடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்புமனு தாக்கல் ஒத்திவைத்துள்ளது.

அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று பிற்பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்புமனு தாக்கல் 7ம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Related Stories: