ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்புக்கு பின் வாகன சோதனையில் இதுவரை 8.43 லட்சம் பறிமுதல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்புக்கு பின் வாகன சோதனையில் இதுவரை 8.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட பின் இது வரை 8 நபர்களிடம் இருந்து ரூ.8,43.900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூர் பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்த கவினிடம் பறிமுதல் செய்த ரூ.1.34, 000-ஐ ஆவணங்கள் அளித்ததால் அந்த பணத்தை திருப்பி அளித்தனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த இவர் கடந்த ஜன.4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதைத் தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.

இந்த நிலையில், மேகாலயா உள்ளிட்ட 3 மாநில தேர்தல் அறிவிப்புடன், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலையும் இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 18-ம் தேதி அறிவித்தது. அதன்படி, பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

அதன் அடிப்படையில் தேர்தல் நேரம் எனபதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போலீசார் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வாகன சோதனையில் இதுவரை 8.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 1.34 லட்சம் ஆவணம் சரியாக இருந்ததால் அந்த பணம் திருப்பி தரப்பட்டது என்று காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: