ஏப்ரல் 6ம் தேதி வரை ஒருவருக்கு 2 ஃபுல் தான் வழங்க வேண்டும் : தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் 'குடி'மகன்கள் அதிர்ச்சி!!

சென்னை : தமிழ்நாட்டில் மதுபானம் வாங்க கடும் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் தேர்தல் ஆணையம், மதுக்கடைகளில் மதுபானம் வாங்குவதற்கும் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

ஏப்ரல் 6ம் தேதி வரை ஒருவருக்கு 2 ஃபுல் தான் வழங்க வேண்டும், அதற்கு மேல் விற்கக் கூடாது என்றும் அதற்கு பதிலாக 4 ஆஃப் அல்லது 8 குவாட்டர்கள் பாட்டில்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் விற்பனை நிலைய விற்பனையாளர்களுக்கு இதுதொடர்பான தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் தொண்டர்களுக்கு சரக்கு பாட்டிலோடு பிரியாணி வழங்கப்படுவதற்கு இந்த முறை ஆப்பு தான்..!

Related Stories:

>