அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பெரும் நிலச்சரிவு

இட்டாநகர்: அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திபெங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரோயிங் – அனினி தேசிய நெடுஞ்சாலை அடித்து செல்லபட்டது. நிலச்சரிவின்போது வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக மற்ற மாவட்டங்களில் இருந்து திபெங் மாவட்டம் துண்டிக்கபட்டுள்ளது.

சாலை துண்டிப்பால் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் வரை பொதுமக்கள் பயணங்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் நெடுஞ்சாலையின் சேதமடைந்த பகுதிகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது உணவு மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. நிலச்சரிவு ஏற்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கும், இராணுவத்திற்கும் உயிர்நாடியாக கருதப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க குறைந்தது மூன்று நாட்கள் ஆகும் என மாவட்ட நிர்வகம் கூறியுள்ளது.

The post அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் பெரும் நிலச்சரிவு appeared first on Dinakaran.

Related Stories: