பிப்ரவரி 6ல் சிலம்பாட்டம் ரீரிலீஸ்

சென்னை: சிம்பு நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ திரைப்படம் ரீரிலாசாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எஸ்.சரவணன் இயக்கத்தில் உருவான ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவுடன் இணைந்து பிரபு, சனா கான், சிநேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் பிரபலமாயின. லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், டி.எஸ்.ரங்கராஜன் தயாரித்தனர்.

சிம்புவின் பிறந்த நாளை தொடர்ந்து இப்படம் மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. கிராமத்து கேரக்டர் மற்றும் நகரத்து இளைஞனாக இரு வேடங்களில் சிம்பு இதில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் பிப்ரவரி 6ம் தேதி எல்மா பிக்சர்ஸ் சார்பில் எத்தில் ராஜ் ரீரிலீஸ் செய்கிறார். இதையடுத்து சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories: