17 வருட இடைவெளிக்கு பிறகு மம்மூட்டி, ேமாகன்லால் இணைந்து நடித்துள்ள பிரமாண்டமான பான் இந்தியா படம், ‘பேட்ரியாட்’. திரைக்கு வந்த ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ ஆகிய படங்களுக்கு பிறகு மகேஷ் நாராயணன் திரைக்கதை எழுதி இயக்கி, ராகுல் ராதாகிருஷ்ணனுடன் இணைந்து எடிட்டிங் செய்துள்ளார். ஸ்பை திரில்லர் ஜானரில் உருவான இப்படம், வரும் ஏப்ரல் 23ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தமிழ் போஸ்டரை அட்லீ, தெலுங்கு போஸ்டரை விஜய் தேவரகொண்டா, இந்தி போஸ்டரை கரண் ஜோஹர், மலையாள போஸ்டரை துல்கர் சல்மான், பிருத்விராஜ் சுகுமாரன், டொவினோ தாமஸ், ஆசிஃப் அலி, உன்னி முகுந்தன், பசில் ஜோசப், ஜெயசூர்யா, சன்னி வேய்ன், நஸ்லென் கே.கபூர், நஸ்ரியா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்பட 40க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் வெளியிட்டனர். மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், ராஜீவ் மேனன் ஆகியோரின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
அன்டோ ஜோசப் பிலிம் கம்பெனி, கிச்சாப்பு பிலிம்ஸ் சார்பில் அன்டோ ஜோசப், கே.ஜி.அனில் குமார் தயாரித்துள்ளனர். சி.ஆர்.சலீம் புரொடக்ஷன்ஸ், புளூ டைகர்ஸ் லண்டன் சார்பில் சி.ஆர்.சலீம், சுபாஷ் ஜார்ஜ் மானுவல் இணை தயாரிப்பு செய்துள்ளனர். முக்கிய வேடங்களில் ரேவதி, ஜினு ஜோசப், டானிஷ் ஹூசைன், ஷஹீன் சித்திக், சனல் அமன், தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப், பிரகாஷ் பெலவாடி நடித்துள்ளனர். இந்தியா, இலங்கை, அமெரிக்கா, அஜர்பைஜான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடந்தது. கடந்த 2024 நவம்பரில் இலங்கையில் தொடங்கிய படப்பிடிப்பு, பிறகு இந்தியாவில் டெல்லி, மும்பை, ஐதராபாத், கொச்சி ஆகிய நகரங்களில் முடிந்துள்ளது. சுஷின் ஷியாம் இசை அமைக்க, மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்வர் அலி பாடல்கள் எழுதியுள்ளார். ஷாஜி நடுவில், ஜிபின் ஜேக்கப் அரங்கம் அமைத்துள்ளனர்.
