உருவகேலியால் உள்ளம் நொந்த ஈஷா ரெப்பா

தமிழில் ‘ஓய்’, ‘நித்தம் ஒரு வானம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள ஈஷா ரெப்பா, தற்போது தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கூறுகையில், ‘நான் சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு தயாரிப்பாளர் எனது போட்டோவை லேப்டாப்பில் பெரிதாக்கி, முழங்கைகள் கருமையாக இருப்பதை குறிப்பிட்டு, ‘இன்னும் நீ அழகாக இருக்க வேண்டும்’ என்றார். அவரது வார்த்தை என்னை பெரிதும் காயப்படுத்தியது. எனது உற்சாகத்தை தடுத்து சோர்வடைய வைத்தது.

தொடர்ந்து இதுபோன்ற உருவகேலிகளை சந்தித்து வருகிறேன். எனது பிறப்பை மாற்ற முடியாது என்பது நிஜம் என்பது புரிந்ததால், தற்போது அதுபோன்ற கேலிகளை ஒதுக்கிவிட்டேன். முன்பைவிட அதிகமான தன்னம்பிக்கையுடன் வாழ பழகிக்கொண்டேன்’ என்றார்.

Related Stories: