எட்டு தோற்றங்களில் ஹீரோவான இயக்குனர்

தமிழில் ‘ஒளடதம்’ என்ற படத்தை தயாரித்து நடித்த நேதாஜி பிரபு, சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதற்காக அவர் தனது உடல் எடையை அதிகரித்து, ஒரு வருட காலம் தலைமுடி மற்றும் தாடி, மீசை வளர்த்து தோற்றத்தை மாற்றியுள்ளார். 8 மாறுபட்ட தோற்றங்களில், 15 மணி நேரத்தில் 30 உடைகள் வரை மாற்றி போட்டோஷூட் நடத்தியுள்ளார். 500க்கும் மேற்பட்ட போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துள்ள அவர், ‘தன்னை நம்பி வருபவர்களை திரையுலகம் கைவிடாது.

எந்த விஷயத்தையும் அலட்சியப்படுத்தாமல், நமக்கு என்ன வரும் என்று யோசித்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தகுதியுள்ளவர்களை திரையுலகமே தேர்ந்தெடுத்து உற்சாகப்படுத்தும். போட்டோஷூட் என்பது எனது அயராத உழைப்பையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி இருப்பதாக பாராட்டினர். விரைவில் நான் இயக்கி நடிக்கும் எனது புதுப்படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகும்’ என்றார்.

Related Stories: