ஒரே கேரக்டர், ஒரே ஷாட்டில் உருவான ஆகாசத்தின் உத்தரவு

சென்னை: தொடர்ந்து 76 நிமிடங்கள் திரையில் ஓடக்கூடிய அளவுக்கு ஒரே ஷாட்டில், ஒரே கேரக்டருடன், மறைமுக ‘கட்’ எதுவும் இல்லாமல், சிங் சவுண்டுடன் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சுயாதீன படம் என்ற பெருமையை ‘ஆகாசத்தின் உத்தரவு’ என்ற படம் பெற்றுள்ளது. இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், இண்டியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகளால் இப்படம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய, அமெரிக்க கூட்டு தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் படமான இது விரைவில் வெளியிடப்படுகிறது. கார்த்திக் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். மகேஸ்வரபாண்டியன் தயாரித்து, இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

Related Stories: