விஜய் தேவரகொண்டாவுக்கு காத்திருக்கிறேன்: சாரா அர்ஜூன்

ஐதராபாத்: `தெய்வத்திருமகள்’, ‘சைவம்’ உள்பட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு மணிரத்னம் இயக்கிய `பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்து, சமீபத்தில் ஹிட்டான `துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்து ஹீரோயினாக மாறியவர், சாரா அர்ஜூன். அவர் தெலுங்கில் நடித்துள்ள `யூஃபோரியா’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. தமிழில் விஜய் நடித்த `கில்லி’ படத்தின் ஒரிஜினல் படமான `ஒக்கடு’ என்ற தெலுங்கு படத்தை இயக்கியிருந்த குணசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் சாரா அர்ஜூன் பேசியதாவது: நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு ரசிகர்கள் முன்னால் நிற்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு மற்றவர்களை வரவேற்கும் கலாச்சாரமும், கதைகளை கொண்டாடும் குணமும் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். நான் எப்போதும் உங்களை பெருமைப்படுத்தவே உழைக்கிறேன். நீங்கள் எனக்கு கொடுத்த அன்புக்கு நன்றி. இதில் நடிக்க வாய்ப்பு அளித்த குணசேகர் சாருக்கு நன்றி. ஒரு குடும்பமாக இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது. இது முக்கியமான கதை, அனைவருக்கும் பிடிக்கும். பல ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ள எனக்கு விஜய் தேவரகொண்டாவையும் பிடிக்கும். அவரது ஜோடியாக நடிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Related Stories: