சென்னை: எம்.ஜி.ஆர்., சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழா வள்ளுவர் கோட்டாத்தில் நடைபெற்றது.திரையுலகில் தொடர்ந்து 50 ஆண்டுகள் சாதனை புரிந்து வரும் ரஜினிகாந்தை கவுரவிக்கும் வகையில் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளாக திரைக்கதை அமைப்பதில் தனி முத்திரை பதித்து வரும் கே.பாக்யராஜுக்கு சிறந்த திரைக்கதை மன்னன் விருது வழங்கப்பட்டது.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் விருது இயக்குனர் ஆர்.பார்த்திபனுக்கும் எம்ஜி.ஆர் விருது இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாருக்கும் நடிகர் திலகம் சிவாஜி விருது இயக்குனர் பி. வாசுவுக்கும் வழங்கப்பட்டது. அம்மா விருது – நடிகை கௌதமி. ஏவி.எம் சரவணன் சாதனையாளர் விருது – இயக்குனர் எஸ்பி. முத்துராமன். கேப்டன் விஜயகாந்த் விருது – நளினி பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதினை பெற்ற பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணியை பாராட்டி விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரபு, கலைப்புலி தாணு, டி.சிவா, ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
