சென்னை: நிவின் பாலி, ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், அஜு வர்கீஸ், ஜனார்த்தனன் உள்பட பலர் நடித்துள்ள மலையாள படம், ‘சர்வம் மாயா’. அகில் சத்யன் இயக்கி உள்ள இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த டிச.25-ம் தேதி இப்படம் வெளியானது. ஹாலிவுட்டில், 2005-ம் ஆண்டு வெளியான ‘ஜஸ்ட் லைக் ஹெவன்’ என்ற பேன்டஸி ஹாரர் காமெடி படத்தின் பாதிப்பில் உருவான படம் இது.
விபத்தில் இறந்து போன இளம்பெண் ஒருவரின் ஆன்மா, நிவின்பாலியுடன் நட்பாகப் பழகி காதலில் விழுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது திரைக்கதை. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கேரளாவில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் ரூ.100 கோடி வசூலை கடந்துவிட்டது.
கடந்த சில வருடங்களாக, தோல்வி படங்களைக் கொடுத்து வந்த நிவின் பாலிக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
