டிஎஸ்கே ஹீரோவாக நடிக்கும் டியர் ஜீவா

சென்னை: பிரகாஷ் வி.பாஸ்கர் இயக்கத்தில் ஹீரோவாக டிஎஸ்கே.சரவண குமார், ஹீரோயினாக தீப்ஷிகா மற்றும் மனிஷா, யோகி, உதய், பிரியதர்ஷினி நடித்துள்ள படம், ‘டியர் ஜீவா’. கணவன், மனைவிக்கு இடையே ஈகோ பிரச்னை ஏற்படுகிறது. அப்போது அவர்களுக்கு சாதகமாக கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டார்களா அல்லது பிரிந்தார்களா என்ற கதையுடன் உருவாகிறது.

அரவிந்த் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ளார். காம்ரேட்ஸ் பிலிம்ஸ் சார்பில் சஹாயா சதீஷ் தயாரித்துள்ளார். முன்னதாக ‘கனா’, ‘அடங்காதே’ ஆகிய படங்களில் பிரகாஷ் வி.பாஸ்கர் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். திருச்சியில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.

Related Stories: