50வது பிறந்த நாளில் சூர்யாவின் கருப்பு டீசர் வெளியானது

சென்னை: சூர்யாவின் ‘கருப்பு’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க திரிஷா, இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.

அதில் படத் தலைப்பிற்கேற்ப கருப்பு வேட்டி, கருப்பு நிற சட்டையுடன் சுருட்டு பிடித்துக் கொண்டே சூர்யா நடந்து வருகிறார். அவருக்கு இரு பக்கமும் கருப்பு சாமி வேடம் போட்டவர்கள் கையில் பெரிய அரிவாளுடன் நிற்கின்றனர். போஸ்டரை தொடர்ந்து படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நேற்று சூர்யாவின் 50வது பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு வெளியாகியுள்ளது. டீசரில், முதலில் கருப்பு சாமியை அறிமுகப்படுத்துகின்றனர். பின்பு அதே போல் சூர்யா இருப்பது போல் காட்டுகின்றனர். அதே சமயம் வக்கீலாக சூர்யா வருகிறார். பல்வேறு ஆக்‌ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

Related Stories: