மாதவன் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, ‘‘நான் பெற்ற தேசிய விருதை யாரும் பெரிதாக கொண்டாடவில்லை. தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படம் இருந்ததால், யாரும் அதை முழுமையாக உரிமை கோரவில்லை. அதற்காக எந்த விழாவும் நடத்தப்படவில்லை. முதலில் இது எனக்கு சிறிது வருத்தம் அளித்தது. பின்னர் நான் ஏன் படம் இயக்குகிறேன் என்கிற கேள்வியை என்னிடமே கேட்டுக் கொண்டேன். என் மனதில் ஒரு கதை இருக்கிறது. அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்பதை உணர்ந்தேன்’’ என தெரிவித்துள்ளார்.
எனது தேசிய விருதை யாரும் கொண்டாடவில்லை; மாதவன் வருத்தம்
