×

பாலிவுட்டில் சாதித்த கீர்த்தி சுரேஷ் படம்

சென்னை: இயக்குநர் ஏ.காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘பேபி ஜான்’. தமிழில் நடிகர் விஜய் நடித்து வெளியான ‘தெறி’ திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், வாமிகா கப்பி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி.எஸ்.அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்தப் படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 ஆம் தேதி பேபி ஜான் திரைப்படம் வெளியானது. முன்னதாக இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பேபி ஜான் திரைப்படம் வசூலில் சாதித்து வருகிறது. இந்தப் படம் வெளியாகி மூன்று நாட்கள் முடியாத நிலையில், ரூ.11.25 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், வருகிற வாரயிறுதி நாட்களில் இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Keerthy Suresh ,Bollywood ,Chennai ,A. Kalies ,Vijay ,Varun Dhawan ,Wamiqa Kappi ,Jackie… ,
× RELATED பாலிவுட் ஹீரோவுடன் கீர்த்தி சுரேஷ்...