சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படம் வெற்றி பெற்றது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மேலும், ராய் லட்சுமி, ஜெயராம், ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆக்ஷன் மற்றும் ரொமாண்டிக் கலந்த இந்த படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. இப்படத்தை மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கி இருந்தார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு தாம் தூம் திரைப்படம் திரையில் மீண்டும் வெளியாக இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 50க்கும் மேற்பட்ட திரையரங்கில் ஜனவரி 3 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.