கேம் சேஞ்சர் புரமோஷன் அமெரிக்காவில் ராம் சரண், ஷங்கர்

நியூயார்க்: ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி அமெரிக்காவின் டல்லாஸ் நகரத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ராம்சரண் பேசியதாவது: நாங்கள் இந்தியாவிலேயே இருப்பது போன்ற உணர்வு இது. ஒருவேளை அதனால்தான் டல்லாஸ் இப்போது டல்லாஸ்புரம் என்று அழைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ஷங்கர் இயக்கும் படத்தில் நான் நடித்ததை என்னால் நம்ப முடியவில்லை. அவர் படத்தில் நடிப்பது என்பது என்னுடைய கனவு.

நான் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இது ஒரு அழகான பயணம். கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ சினிமாவுக்கு ஷங்கர். அவர் தான் நம்பர் ஒன் கமர்ஷியல் இயக்குநர். கடந்த 5 ஆண்டுகளில் இது என்னுடைய முதல் தனி திரைப்படம். இவ்வாறு ராம்சரண் தெரிவித்தார்.

இயக்குநர் ஷங்கர் பேசும்போது, ‘‘எனது பாணியில் தனித்துவமான கதையுடன் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். அதன் விளைவுதான் ‘கேம் சேஞ்சர்’. கடந்த 30 ஆண்டுகளாக நான் நேரடி தெலுங்கு படம் எடுக்கவில்லை என்றாலும், தெலுங்கு ரசிகர்கள் எப்போதும் என் மீது பெரும் அன்பு செலுத்தினர். நான் முன்பு மற்ற டோலிவுட் ஹீரோக்களுடன் பணிபுரியலாம் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை ராம்சரணுடன் தெலுங்கில் அறிமுகமானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி’’ என்றார்.

Related Stories: