தமிழை விமர்சனம் செய்தாரா? சங்கீதாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

சென்னை: தமிழ் எனக்கு பிடிக்காது என்று நடிகை சங்கீதா சொன்ன வார்த்தையை வைத்து நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சங்கீதா பேட்டியளித்தார். அவரை கலா மாஸ்டர் பேட்டி எடுத்தார். அப்போது, பல மொழிகளில் நீ நடித்திருக்கிறாய். படப்பிடிப்புக்கு உனக்கு கம்ஃபர்ட்டாக இருக்கும் மொழி எது என கேட்டார். அதற்கு பதிலளித்த சங்கீதா, ‘‘எனக்கு தமிழ் பிடிக்காது. இதைப் பார்த்து பலருக்கு கோபம் வரலாம். அதனால் எனக்கு கவலையில்லை. தெலுங்கு சினிமாவில் கொடுக்கும் மரியாதையை இங்கு கொடுப்பதில்லை. அங்கு எனக்கு நல்ல சம்பளமும் தருகிறார்கள். அத்துடன் மதிப்பும் கிடைக்கிறது. அதனால் அங்கு தொடர்ந்து நடித்து வருகிறேன். தமிழ் சினிமாவில் இந்த நிலையே வேறாக இருக்கிறது.

அவர்கள்தான் எனக்கு வாழ்க்கை தந்தது போல் பேசுவார்கள். அங்கு யாரிடமும் நான் வாய்ப்புகள் கேட்டதில்லை. அதற்கு எனக்கு அவசியமும் கிடையாது. எங்கு நமக்கு மரியாதை கிடைக்கிறதோ அந்த இடத்தை தானே நாடிப்போவோம். அதைத்தான் நானும் செய்கிறேன்’’ என்றார். தமிழ் சினிமாவை குறிப்பிட்டு சங்கீதா இப்படி பேசினாலும் கலா மாஸ்டர் மொழி பற்றி கேட்டதும், உடனே தமிழ் எனக்கு பிடிக்காது என அவர் சொன்னதால், நெட்டிசன்கள் சங்கீதாவை ட்ரோல் செய்து வருகிறார்கள். ‘பிதாமகன் படம் இல்லாவிட்டால் சங்கீதாவை யார் என்றே மக்களுக்கு தெரிந்து இருக்காது. அவர் இப்போது தமிழை புறக்கணிப்பதை பாருங்கள்’ என நெட்டிசன்கள் கடுமையாக தாக்கி வருகிறார்கள்.

Related Stories: